சென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம், சிபிஐ விசாரணை

 

dinakaran38-27-1493285533

 

 

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக இந்த வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்..

இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 4–வது நாள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரனை போலீசார் கைது செய்தனர்.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸுக்கு அனுமதி கிடைத்தது.

இந்த நிலையில்,  விசாரணைக்காக டிடிவி தினகரனை  டெல்லி போலீஸ், சென்னைக்கு அழைத்து வந்துள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர்.

இதேபோல் அவரிடம் வழக்கறிஞர் குமார் வீடு, தினகரன் வீடு ஆகிய இடங்களில் வைத்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிடிவி தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். மேலும் டிடிவி தினகரனை பெங்களூரு, கொச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top