காஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

 

 

kasmir8

 

 

இன்று ஸ்ரீநகர் லால் சவுக்  [Lal Chowk] பகுதியில் இந்திய ஒடுக்குமுறையை எதிர்த்து SP Higher Secondary School மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் அனைத்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது இந்திய இராணுவம் தாக்குதலை நடத்தியது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 6 மாணவர்களை கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து SP Higher Secondary School  மாணவர்கள் மற்றும் Government College for Women மாணவிகள் ஸ்ரீநகர் MA சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

kasmir7
போராட்டம் நடத்திய மாணவர்கள் இந்திய ஒடுக்குமுறையை எதிர்த்தும்,
காஷ்மீரின் விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

அடிப்படை உரிமைக்காக போராடிய மாணவர்களின் மீது இந்திய இராணுவம் கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மற்றும் கல் எறிந்து தாக்குவது என எல்லாவிதமான அத்துமீறில்களையும் மாணவர்களின் மீது நடத்தியுள்ளது.

 

kasmir12

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top