‘ஊட்டியில் அணைகட்டுவோம்’ தவறானா தகவல் பரப்பும் சமூகவிரோதிகள்!

 

bhavanisagardam2

கடந்த சில நாட்களாக  காவேரி ஆறு தமிழகத்தில் தான் உற்பத்தியாகிறது   ஊட்டியில் அணைகட்டினால்  கர்நாடகாவிற்கு செல்லும் காவேரி நீரை தடுத்து நாம் பயன்படுத்தலாம் அதனால் கர்நாடக நம்மிடம் தண்ணிருக்கு பிச்சை  எடுக்கனும் என்று ஒரு  தவறானா  தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது,

ஊட்டி அருகேயுள்ள மாயாறு(moyar) அணை பற்றி தான் தற்போது இணையதளங்களில் மாயாறு என்பது சிறிய 50 கி.மீ நீளம் கொண்ட காட்டாறு. மேலும் அந்த ஆற்றின் நீர்வரத்தின் மூலம் தமிழ்நாடு அரசு 36 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் அதற்கு நீர் வரத்தே ஊட்டியில் இருக்கும் சிறு சிறு ஏரி குளங்கள் மூலம் வருகிறது. ஆனால் காவேரி என்பது 740 டிம்சி   கொண்ட மிக பெரிய சமவெளி இதை  ஒரு 50 கிமீ  தூரம் மட்டுமே  ஒடும் ஓரு காட்டாற்றை தடுத்து தீர்த்து விட முடியும் என்று கதை கட்டி விடுகிறார்கள்.

ஊட்டி மலைபகுதிகளில் உள்ள மேற்சொன்ன ஏரி, குளங்களை பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலயே தேக்கி அணையை கட்டி தான் மாயாறுக்கு நீர் வருகிறது. மாயாறுக்கு கிளையாறுகள் ஏதும் இன்றி எங்கும் பிரியாமல் மலை பள்ளத்தாக்குகளில் இறங்கி நேராக பவாணிசாகர் அணைக்கு தான் அதன் மொத்த நீரும் வந்தடைகிறது.

ஆற்றின் 26 கிமீ பகுதி கர்நாடகா வழியாகவே வருகிறது . இருப்பினும் கிளை ஆறு ஏதும் கிடையாது. மேலும் 60கிமீ தொலைவில் இருக்கும் கர்நாடக கபினி அணைக்கும், மாயாறுக்கும்  இணைவதறக்கு ஒரு துளியளவும் வாய்ப்பு கூட கிடையாது.

அடுத்து ஒரு ஆற்றின் மொத்த நீரும் பம்பு செட்டு பைப்ல வருகிற மாதிரி ஒரே ஊத்துல வாராது.அதன் நீர் பிடிப்பு பகுதிகள் முழுவதுமாக  மழையில் இருந்து நீர் பிடித்து வருகிறதுதான்.

MAP

 

இந்த கதை பாவனிக்கு வேனா பொருந்தும் அதுதான் தமிழ் நாட்டுல இருந்து கேரளாவிற்குள்  போயிட்டு வரது. ஆனால் பாவனி, காவேரி ஓட கிளை நதி என்பதால் அது கேரளாவிற்குள்ள போகிறதை நாம தடுத்தா அது நடுவர் மன்ற தீர்புக்கு எதிரானது. பிறகு நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகாவில் இருந்து வரும் 192 டி.எம்.சி தண்ணீர் கேட்பதில் சிக்கல் வரும்.

காவேரி பிரச்சனையில் காவேரி  நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஒதுக்கப்படுள்ள 419 டி.எம்.சி யும் கர்நாடகாவில் இருந்து வருவது இல்லை. 192 டி.எம்.சி தான் கர்நாடகாவில் இருந்து வருகிறது மீதி இருக்கிற 227 டி.எம்.சி தென் மேற்கு பருவகாற்று மூலம் பெறப்படுகிறது. தமிழகத்தின் பகுதிகளில் இருந்து பெறுவது அதாவது காவேரியின் கிளை ஆறான பாவானி , நொய்யல், அமராவதி,  நொய்யலின் கிளை நதியான பழனியில் இருந்து வரும்  சண்முகா நதி உள்ளிட்ட ஆறுகள் மூலம் கிடைப்பது. இதில் பாவானி ஆறு தான் தமிழக பகுதியில் உருவாகி   22 கி.மீ கேரளாவுக்குள் பயணித்து மீண்டும் தமிழகத்துகுள் வந்து பாவானி சாகர் அணையில் சேர்கிறது. இதே பவானி சாகர் அணையில் தான் ஊட்டியில் தடுக்க சொல்லும் மோயாரும் 26 கி. மீ  பயணித்து  பாவானி அணையில் சேர்கிறது. இதில் நொய்யல் மேற்கு தொடர்சிமலையின்    கேரளாபகுதியின்  மழம்புழா  அணையில் இருந்து வருகிறது

பெரும்பாலும் சமவெளியை கொண்ட ஒரு கடைமடை பகுதி விதிகளை மீற முடியாது. காவேரி, பாவானி,  நொய்யல் என  எல்லா   பிரச்சனைக்கெல்லாம் தீர்வு காவேரி மேலாண்மை வாரியம்தான் அதோட கட்டு பாட்டில் அனைத்து அனைகளையும் கொண்டுவருவதுதான்.

அதனால்தான் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் காவேரி மேலாண்மைவாரியம் அமைப்பதுதான் ஒரே  தீர்வு என்று போராடி கொண்டிருகிறது.

 

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Scroll To Top