பெருந்தன்மையோடு வருத்தம் தெரிவித்து தமிழர்களின் மனதில் உயர்ந்த நடிகர் சத்தியராஜ்

 

sathyaraj (1)

 

காவிரி பிரச்சனையின் போது தான் பேசிய பேச்சு கன்னட மக்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கான வருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சத்யராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

9 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது   தொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ் திரைத்துறை சார்பில்இதற்கு கண்டன கூட்டம் நடைப்பெற்றது. எல்லோரும் இதனை எதிர்த்து பேசினார்கள். அதில் நானும் ஒருவன். அதே வேளையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கர்நாடக திரைப்பட கலைஞர்களும் ஆவேசமாக பேசினார்கள்.

நான் பேசிய வார்த்தை கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதாக நான் அறிந்தேன். நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல. ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் நடந்த அந்த கண்டனக் கூட்டத்தில் நான் பேசிய அந்த வீடியோ பதிவை யூ ட்யூப்பில் பார்த்ததால், நான் பேசிய வார்த்தைகளால் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என் ஆதரவாளர்களும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘பாகுபலி’ என்ற மிகப் பெரிய படத்தில் மிகச் சிறிய தொழிலாளிதான் நான். ஒருவனின் பெயர் பொருட்டு  பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயமாவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாமல் கர்நாடகத்தில் வெளியிட பாகுபலி இரண்டாம் பாகம் வாங்கிய விநியோகதஸ்கர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு எனக்கு உள்ளது. இதனை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆனாலும், இனி வரும் காலங்களில் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையானாலும் சரி, காவிரி நதிநீர் பிரச்சனையானாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையானாலும் சரி, தமிழக மக்களின் நலன் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.

இப்படி நான் கூறுவதால், இந்த சத்தியராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தங்கள் செய்ய வேண்டாம், என்னால் நஷ்டம் அடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதைவிட எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி. எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக் கொண்டு பாகுபலி 2ம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.என்று சத்யராஜ் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு நடிகனுக்கு எதிராக, கர்நாடகாவில் உள்ள வாட்டாள் நாகராஜன்  எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எதற்கும் குரல் கொடுக்கும் கமலஹாசன்,அவ்வப்போது குரல் கொடுக்கும் ரஜினிகாந்த்,நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், உள்ளிட்டோர் இதுகுறித்து பேசாமல் மௌனமாய் இருந்துள்ளனர் .

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top