இட ஒதுக்கீடு, ‘நீட்’ தேர்வு விலக்கு , அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்

 

arasu

 

மருத்துவ பட்ட  மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ‘நீட்’ தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர். 2-வது நாளான நேற்று, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், 2 மணி நேரம் வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘எம்பிபிஎஸ் முடித்து டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம். 2 ஆண்டுகள் பணியாற்றினால் பட்ட மேற்படிப் பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதால் பலரும் அரசு டாக்டர் களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால், யாரும் அரசு மருத்துவமனை பணிக்கு வரமாட்டார்கள். எனவே, 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் நீட் தேர்வில் விலக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை டாக்டர்கள் அனைவரும் புற நோயாளிகள் பிரிவை புறக் கணித்து 21-ம் தேதி (இன்று) போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பட்ட மேற்படிப்பு மாணவர்களும் இதில் பங்கேற்கின்றனர். அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்படும். மற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அவரவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவார்கள்’’ என்றார்.

டாக்டர்கள் போராட்டத்தால் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் புறநோயாளிகள் பாதிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top