சர்ச்சைக்குரிய ஆழ்கடல் சுரங்கத் திட்டம்: பப்புவா நியூ கினியாவில் விரைவில் துவக்கம்!

papua new guinea underwater mining projectகடலுக்கடியில் உள்ள தாதுக்களை பிரித்தெடுக்கும் உலகின் முதல் ஆழ்கடல் சுரங்கத் திட்டம் பப்புவா நியூ கினியா நாட்டில் விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதற்காக கடலுக்கடியில் உள்ள ஒரு பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்குவதற்கு பப்புவா நியூ கினியாவுடன் கனடா நாட்டின் சுரங்க நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தின் நோக்கம், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்தில் உள்ள தங்கம், தாமிரம் மற்றும் பிற மதிப்புமிக்க தாதுக்களை பிரித்தெடுப்பதுதான். இந்த ஒப்பந்தத்தின்படி, சுரங்கத்தின் 15 சதவீத பங்குகள் பப்புவா நியூ கினியா எடுத்துக்கொள்ளும்.

papua new guinea underwater mining project

சுரங்கப் பணிகளுக்காக அந்த அரசு ரூ.120 மில்லியன் டாலர் செலவு செய்யும். சுரங்கம் தோண்டுவதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த சாயில் மெஷின் டைனமிக்ஸ் தொழிற்சாலையில் 310 டன் எடை கொண்ட ராட்சத எந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

papua new guinea underwater mining project

இந்நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றினால், பேரழிவு ஏற்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

papua new guinea underwater mining project

papua new guinea underwater mining project


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top