ஆளுநரை அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை சந்தித்து பேசினர்

 jayakumaar

ஆளுநர் வித்யாசாகர் ராவை, பழனிசாமி அணியைச் சேர்ந்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இன்று திடீரெனச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. மூன்றாகப் பிரிந்தநிலையில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்தது முதல்வர் பழனிசாமி அணி. இதை வரவேற்றது, பன்னீர்செல்வம் அணி.

இந்த நிலையில், இருஅணியினரையும் ஒன்றுசேர்க்கும் வகையில் குழு அமைக்கப்பட உள்ளது.  குழு விரைவில் அமைக்கப்பட்டு, இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையியில், மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர், இன்று காலை திடீரென ராஜ்பவன் வந்தனர். ஆளுநர் வித்யாசாகர் ராவை  சந்தித்துப் பேசிவருகின்றனர். அப்போது, தமிழக அரசியல் சூழல்குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இருதரப்பு அணியினரும் இணைய பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ஆளுநருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top