லிபியாவில், உணவு மற்றும் தண்ணீர் இன்றி உயிரிழந்த 28 அகதிகள்

 

 

lipiuya

 

ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் லட்சக்கணக்கான அகதிகள் லிபியா வழியாகச் செல்கின்றனர். உள்நாட்டில் தீவிரவாதம், பசி, பட்டினி போன்ற காரணங்களால் ஆப்பிரிக்க நாட்டவர்கள் அகதிகளாகப் பிற பகுதிகளுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ,லிபியாவில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால்  28 அகதிகள் மரணத்தைத் தழுவியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறந்தோரின் உடல்கள் பாலிதீன் பைகளில் சுற்றப்பட்டு லிபியாவின் சப்ரதா நகருக்கு அருகில் அகதிகளுக்கு என்றே தனியாக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு. 3 அடி ஆழம் உள்ள பெரிய குழியைத் தோண்டி. ஒரே குழியில் அனைத்து உடல்களும் கிடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் பயணம் மேற்கொண்ட லட்சக்கணக்கான அகதிகளில் ஏராளமானோர் பாதி வழியிலேயே உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது.

இந்த உடல்கள் அனைத்தும் லிபியாவைச் சேர்ந்த மீனவர் ஒருவரால் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top