டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

 

DINA

 

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான புகாரில் டிடிவி தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது.

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாணையில் டிடிவி தினகரனிடம் இருந்து பணம் பெற்றதை ஒப்புக்கொண்டார். இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முன்றதாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை செய்ய டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை 5.15 மணிக்கு டெல்லியிலிருந்து போலீசார் விமானம் மூலம் சென்னை புறப்படுகின்றனர்.

சென்னையிலேயே முகாமிடும் போலீசார் டிடிவி தினகரனிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். சென்னை வரும் போலீசார் சுகேஷ் சந்திரசேகரையும் உடன் அழைத்து வருகின்றனர்.

டெல்லி நீதிமன்றம் சுகேஷ் சந்திர சேகரை விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே கட்சியில் ஏற்பட்டடுள்ள பிரச்சனை,டெல்லி போலீசின் வருகை உச்சக்கட்ட டிடிவி குழப்பத்தில் தினகரன் உள்ளரர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top