சிம்லா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

 

 

AARU

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் விகாஸ் நகரில் இருந்து இமாச்சல பிரதேசத்தின் துனி கிராமத்திற்கு தனியார் பேருந்து ஒன்று இன்று காலை புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்தனர். காலை 10.15 மணியளவில் இமாச்சல பிரதேசம் சிம்லா மலைப் பாதையில் வந்தபோது, பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சிறிது நேரத்தில் மலைப்பாதையில் இருந்து உருண்ட பேருந்து, தன்ஸ் ஆற்றில் கவிழ்ந்து நொறுங்கியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச்சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்

சிம்லாவில் இருந்து 190 கி.மீ. தொலைவில் நடந்த இந்த கோர விபத்தில் 45 பேர் பலியாகினர். ஆற்றில் கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

உயிரோடு இருப்பவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இமாலய மலைப் பகுதிகளில் அபாயகரமான, குறுகிய சாலைகளில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது அல்ல ஆனால் இவ்வாறு நடைபெறும் விபத்துகளை தடுக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என அருகிலுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top