மதுரை அருகே மாணவர்களால் அடித்து நொறுக்கப்பட்ட மதுக்கடை .

 

11
மதுரையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுகக்கடையின் பொருட்களை அடித்து நொறுக்கினர் கல்லூரி மாணவர்கள் .

மதுரை, பொய்கைக்கரைப்பட்டியில் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட மதுக்கடையை பொதுமக்கள் அங்கிருந்து அகற்றினர் . இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏறபட்டுள்ளது. பொய்கைக்கரைப்பட்டியில் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்களுடன் கல்லூரி சேர்ந்து மதுக்கடையை அடித்து நொறுக்கியுள்ளனர் .

இது குறித்து மாணவர்கள் பேசிய போது , மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு அருகிலேயே மதுக்கடை அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டிய கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிப்பதா அல்லது டாஸ்மாக்கை வேடிக்கை பார்ப்பதா என கேள்வி எழுப்பினர்.

மேலும் மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top