அளவில்லா அதிகாரம் வழங்கும் கருத்தறியும் வாக்கெடுப்பு; துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி.

 

resep

 

துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், தனது அதிபர் பதவியின் அதிகாரங்களை அதிகரிக்க வகை செய்யும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.அதன்மூலம் அவர் 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும்.

99.45 சதவீதம் பதிவான வாக்குகளில் “ஆம்” என்ற தரப்பு 51.37 சதவீதமும், “இல்லை” என்ற தரப்பு 48.63 சதவீதமும் பெற்றிருந்ததால், தேர்தல் குழு ஆம் என்ற தரப்பு வெற்றி பெற்றதாக அறிவித்தது.

ஆனால் துருக்கியின் இரண்டு முக்கிய எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.

குடியரசு மக்கள் கட்சி, குறிப்பிட இடங்களில் உள்ள 60 சதவீத வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் முத்திரை இல்லாத வாக்குச் சீட்டுகள் இடம்  பெற்றுள்ளன இந்த  முடிவை  ஏற்று கொள்ள முடியாது எனஅந்த கட்சி விமர்சனம் செய்துள்ளது. அதே சமயத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் அது நிருபிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைந்த எர்துவானின் ஆதரவாளர்கள் பெரிய நகரங்களில் பேரணிகளை நடத்தினர்; அச்சமயத்தில், இஸ்தான்புல்லில் வாக்கெடுப்பை எதிர்க்கும் தரப்பு, எதிர்ப்பை தெரிவிக்கும் பாரம்பரிய முறையில், பானைகளையும் தட்டுகளையும் தொங்கவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

துருக்கியின் தென் கிழக்கு மாகாணமான டியார்பாக்கரில், வாக்குச் சாவடிக்கு அருகில், எப்படி வாக்காளர்கள் வாக்களித்தார்கள் என்பது குறித்து எழுந்த சர்ச்சையில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சட்ட அமைப்பு மாற்றங்களை செயல்படுத்தும் போது முடிந்தவரை பொதுவான மக்களின் விருப்பம் குறித்து கேட்குமாறு துருக்கி அதிகாரிகளிடம் அறிக்கை ஒன்றில் ஐரோப்பிய ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top