புழல் ஜெயிலில் டைரக்டர் கவுதமன் உண்ணாவிரதம் வாபஸ்

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் டைரக்டர் கவுதமன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Withdraw-director-gowthaman-hunger-strike-in-puzhal-prison_SECVPF

இதையடுத்து போலீசார் டைரக்டர் கவுதமன், கல்லூரி மாணவர்கள் அரவிந்தன், கோபாலகிருஷ்ணன், பிரபாகரன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர், ஜனாதிபதி சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி புழல் ஜெயிலில் டைரக்டர் கவுதமன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் புழல் ஜெயிலர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை டைரக்டர் கவுதமன், கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top