தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு

தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்ற சந்திரசேகர்ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி முஸ்லிம்கள், மற்றும் பழங்குடியினர் (எஸ்.டி) ஆகியோருக்கு கல்வி, அரசு வேலை ஆகியவற்றில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு சதவீதத்தை உயர்த்தும் வகையிலான மசோதாவுக்கு மாநில மந்திரி சபையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 12.68 சதவிதமாக இருக்கிறது. அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரின் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மசோதா தெலுங்கானா சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பா. ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தெலுங்கானா அரசு மேற்கொண்டுள்ள முயற்சி அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது.

மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top