மோடிக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை: ஒமர் அப்துல்லா சவால்!

omar abdullaஇந்திய நாட்டின் பிரதமராக வர விரும்பும் நரேந்திர மோடிஒமர் அப்துல்லாக்கு காஷ்மீருக்கு வரும் தைரியமில்லை என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

மோடிக்கும் ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லாவுக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே, தந்தைக்கு ஆதரவாக ஒமர் அப்துல்லா மோடியை குறிவைத்து இந்த தாக்குதலை தொடுத்துள்ளார்.

முன்னதாக காஷ்மீர் மாநிலம், பழைய ஸ்ரீநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா, “பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஓட்டுபோடுபவர்களை கடலில் மூழ்கடிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

பரூக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு நரேந்திர மோடி வீடியோ மூலம் பதிலடி கொடுத்தார். அந்த வீடியோவில், ”மதச்சார்பின்மை, நமது அரசியலமைப்பின்றி எங்களுடையை ரத்தத்திலும் உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை. இது நமது கலாச்சாரம்.

காஷ்மீரின் மதச்சார்பின்மையை உங்களது குடும்பம்தான் அழித்துள்ளது. காஷ்மீரில் மதச்சார்பின்மை மீது பெரிய தாக்குதல் நடத்தப்பட உங்கள் தந்தை ஷேக் அப்துல்லா தான் காரணம். காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் கட்டாய இடம் பெயர்வுக்கு நீங்களே பொறுப்பு” என மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவாக களமிறங்கி உள்ள  ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தமது தந்தை பரூக் அப்துல்லாவின் ஆட்சி காலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் ஜம்மு காஷ்மீரிலிருந்து வெளியேறவில்லை என்றும், பா.ஜனதா மற்றும் அதன் தோழமை கட்சியின் ஆட்சி காலத்தில்தான் குறிப்பாக, ஜக்மோகன் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த காலத்தில்தான்  அவர்கள் வெளியேறினார்கள் என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் மீண்டும் இந்த மாநிலத்திற்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் கூறிய ஒமர் அப்துல்லா, “மோடிக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை. இந்த நாட்டின் பிரதமர் ஆக மோடி விரும்புகிறார். ஆனால் அவருக்கு காஷ்மீருக்குள் வரும் தைரியமில்லை. காஷ்மீர் மக்களின் இதயத்தில் மோடிக்கு இடம் இருப்பதாக நான் கருதவில்லை.

மதச்சார்பின்மை குறித்து நீங்கள் எங்களுக்கு சான்றளிக்க தேவையில்லை என்பது எங்களுக்கு மகிழ்ச்சியானது. அப்படி இல்லாது போனால், நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம்.” என்றும்  மேலும் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top