ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பரூக் அப்துல்லா வெற்றிபெற்றுள்ளார்.
கடந்த 9ம் தேதியன்று ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில்,, 7% வாக்குகள் பதிவாகின. பல இடங்களில், மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. எனினும், இதில் 2% வாக்குகள்கூட பதிவாகவில்லை. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரைவிட, 10,700 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஸ்ரீநகர் தொகுதி, பரூக் அப்துல்லாவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாகும்.
தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பரூக் அப்துல்லா, ‘’ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆட்சியை உடனடியாக, மத்திய அரசு கலைக்க வேண்டும். ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்,’’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.