ஈரான் நாட்டில் பலத்த மழை, வெள்ளம்; 25 பேர் பலி

ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் பேய்மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அங்குள்ள கிழக்கு அசர்பைஜான் மாகாணம் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் ஆறுபோல மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டன. பல வாகனங்கள், வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டன.

நேற்று மதியம் வரை மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப்படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் அஜாப்ஷிர் மாவட்ட உயர் அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘எங்கள் மாவட்டத்தில் பலியான 3 பெண்கள், 9 ஆண்களின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்’’ என கூறினார்.

அதே மாகாணத்தில் அசார்ஷாகிர் மாவட்டத்தில் 2 பேர் வெள்ளத்துக்கு பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் 3 மாகாணங்களில் 11 பேர் பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. மழை, வெள்ளத்தின்போது 37 பேர் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top