ஜோஹர் கோப்பை ஆக்கி: இந்திய அணி புறக்கணிப்பு

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜோஹர் கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் அக்டோபர் 22-ந் தேதி 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

Johar-Cup-hockey-Indian-team-boycott_SECVPF

2014-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் ரசிகர்களை நோக்கி தகாத முறையில் சைகை செய்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்காத வரை அந்த அணி பங்கேற்கும் போட்டிகளை இந்திய ஆக்கி அணி புறக்கணிக்கும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தது.

அதன்படி 2-வது ஆண்டாக இந்திய அணி இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top