தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் நடைபெற இருந்த ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை சம்மனை ஏற்று விஜயபாஸ்கர் சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மீண்டும் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் அதிமுக (அம்மா) அணியின், தினகரன் தனது அடையாறு இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது என கூறினார்.
 அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தனர். புத்தாண்டு வாழ்த்து கூறவே அனைவரும் வந்திருந்தனர். தன் மீது எந்த தவறும் இல்லையென அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்து கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கர் ஊருக்கு சென்றதாலே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது. சோதனை நடந்தாலே பதவி நீக்கம் செய்வது எந்த விதத்தில் நியாயம்? எத்தனை சோதனை நடந்தாலும் அமைச்சர்கள், அரசு பற்றி எந்த தவறும் வெளிப்படபோவதில்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என கூறிஉள்ளா டிடிவி தினகரன்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top