விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கண்டனம்.

 

nithimantram

 

தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.

சென்னை: விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே, விசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது, விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என்று, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top