திருப்பூரில் பெண்களை தாக்கிய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன் கோவில் செல்லும் வழியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை நேற்று தொடங்கியது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது.

police-officer-slapped-woman-cheek---police-against-case_SECVPF

இதை கேள்விப்பட்டு அங்கு வந்த உள்ளூர் எம்.எல்.ஏ. கனகராஜ், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், கடையை நிரந்தரமாக மூடினால் தான் கலைந்து செல்வோம் என்று போராட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர்.

இதனால், போராட்டக்காரர்கள் மீது மாலையில் போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது ஈஸ்வரி என்ற 45 வயது பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். அடி தாங்க முடியாத அந்த பெண் நிலைகுலைந்தார்.

இந்த காட்சி டி.வி. சேனல்களிலும், புகைப்படமாக பத்திரிகைகளிலும் வெளியானது. இதேபோல போலீ சார் நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் சிவகணேஷ் மண்டை உடைந் தது. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தற்போது காயமடைந்த அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது பா.ம.க.வை சேர்ந்த வக்கீல் க.பாலு ஆஜராகி, ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிதான் தமிழகத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் இழுத்து மூடப்பட்டன.

இதையடுத்து, தமிழக அரசு மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை விதிமுறைகளை மீறி அமைக்கின்றனர். இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஏராளமான போராட்டம் நடக்கின்றன.

மேலும், திருப்பூர், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மக்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். 45 வயது பெண் என்று கூட பார்க்காமல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கொடூரமாக தாக்கியுள்ளார்.

அந்த பெண்ணின் கன்னத்தில் அவர் ஓங்கி அடித்ததால், தற்போது அவருக்கு காது கேட்கவில்லை. அதேபோல சிவகணேஷ் என்பவர் மண்டையை போலீசார் அடித்து உடைத்துள்ளனர்’ என்று கூறினார்.

மேலும், ‘போலீசார் மனித உரிமையை மீறி செயல்படுகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடையை திறக்க கூடாது என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை மீறி போலீசார் செயல்பட்டுள்ளனர்.

மதுபானக் கடைகள் மக்களின் எதிர்ப்பை மீறி குடியிருப்பு பகுதிகளில் திறக்கப்படுகிறது. எனவே, பெண்ணை கொடூரமாக தாக்கிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யவேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வழக்கு தொடர போகிறேன். இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். உடனே வழக்கை தாக்கல் செய்யுங்கள், இந்த வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தானும் வழக்கு தொடர போவதாக டிராபிக் ராமசாமி கூறினார். அவர், ‘கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றும் கூறினார்.

இவரது கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘வழக்கு தொடரும் அதே நேரத்தில், போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்துக் கொடுப்பது தான் முதல் பணி. அதுகுறித்து பிற்பகலில் உத்தரவிடுவோம்’ என்று கூறினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top