பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு அறிவிப்பு

தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தூக்கு போட்டுக் கொள்ளுதல், மொட்டை அடித்துக் கொள்வது என ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக போராட்டம் நடத்தினர்.
201704120244508218_No-farm-loan-waiverFederal-minister-of-information-to_SECVPF
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அரசியல் தலைவர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இன்று 29–வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மராட்டிய மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே  தமிழகத்திலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளதாக அகில இந்திய வானொலியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது விவசாயிகளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top