தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் காஜாமலை, தஞ்சை ரோடு, அரியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கோடை காலத்தையொட்டி தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடந்தது.

Thameem-Ansari-Says-Central-Government-uses-election_SECVPF

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடந்தன.

அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஏராளமான புகார்கள் வந்தன. ஆனால் அப்போதெல்லாம் ஆணையம் அங்கு தேர்தல்களை ரத்து செய்யவில்லை. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை ஆணையம் ரத்து செய்திருப்பது உள் நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

ஆளும் மத்திய அரசின் சொல்படி வருமான வரித்துறை, சி.பி.ஐ., தேர்தல் ஆணையம் நடக்கிறது. தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட்டால் அ.தி.மு.க. (அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார்.

இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறது. மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் டி.டி.வி. தினகரன்தான் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top