பிரதமர் போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா;பாஜக கங்கை அமரன் ஆணவ பேச்சு .

 

kankai amaran

 

தமிழக விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கேட்பதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் மீசை வழித்து, மொட்டை அடி, எலி கறி தின்று, பாம்பு கறி தின்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி, போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு உள்பட 8 பேரை போலீசார் அழைத்து சென்றனர்.ஆனால் மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யாமல் விவசாயிகளை போலீசார் ஏமாற்றியுள்ளனர். இதனால், மோடியை பார்க்கச் சென்ற விவசாயிகள் அனைவரும் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பாஜகவில் சேர்ந்து ஆர்.கே. நகரில் போட்டியிட ‘சீட்’ வாங்கிய கங்கை அமரன்  ,தமிழக விவசாயிகளின்   கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா எனச் சிந்திக்க வேண்டும் என்று தெனாவட்டாக பேசியுள்ளார்.

மேலும்,நிர்வாணப் போராட்டம் அவசியமா என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் கொச்சைப்படுத்தி பேசிஇருக்கிறார்

ஒரு நாட்டின் பிரதமர் எல்லோரையும் சந்தித்துவிட முடியுமா என கங்கை அமரன் அநியாயமாக பேசியதோடு, கடனோடு வாழும் விவசாயிகளை பணக்கார விவசாயிகள்  என கேலி பேசியுள்ளார்.   ஏக்கர்  கணக்கில் வைத்திருக்கும் பெரிய பெரிய விவசாயிகள் கூட கடன் வாங்கிக் கொண்டு அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நியாயம்? என்று தன்னை ஒரு பாமர அரசியல்வாதி என்று சொல்லிக் கொண்டே, பாஜக தலைவர்கள், எச்.ராஜா ஆகியோர்கள் எப்படி விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருகிறார்களோ அதே போல  கங்கைஅமரனும் விவசாயிகளை தரக்குறைவாக பேசி தானும் அப்படித்தான் என்பதை நிருபித்துள்ளார் .

கங்கை  அமரன் தான் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் என்பதை மறந்து இவ்வாறு இவர் கூறுவது சரியல்ல,திரைப்படத் துறையினரையெல்லாம் சந்திக்கும் பிரதமர் சோறு போடும் விவசாயிகளை ஏன் சந்திக்க மறுக்கிறார்  என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top