ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து;தேர்தல் கமிஷன் அறிவிப்பின் ரகசியம்

 

election-commission_650x400_71444664201

 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிடி தினகரன் அம்மா அதிமுக வுக்கும் திமுக வுக்கும் சரியான போட்டி நிலவியது.வழக்கம் போல் நடைபெறும் பண பட்டுவாடா நடந்தது. பாஜக தனது மறைமுக B அணியாக பன்னீர்செல்வம் அணியை ஆதரித்தது.தனது நேரிடையான வேட்பாளர் கங்கைஅமரனை நிறுத்தியது. கங்கை அமரனுக்கு பிரசாரத்திற்கு பாஜக விலிருந்து தமிழிசை மட்டும் நியமிக்கப்பட்டு இருந்தார்.அவருக்கு பாஜக சார்பாக டிவி யில் பேசுகிற ராகவனோ ,நாராயணனோ அதுபோல மற்றவர்களோ பிரச்சாரத்திற்கு வரவில்லை.இதில் கங்கை அமரனுக்கு மிகவும் வருத்தம் இருந்தது.பாஜக வின் இந்த பேத மனப்பான்மை கங்கை அமரனோடு இருக்கிற மற்றவர்களையும் சங்கடப்படுத்தியது.ஒரு நிலையில் தமிழிசையே இந்த இடைதேர்தலை நிறுத்திவிடலாம் என்கிற அளவில் பேசினார்கள்.

முன்றுமுறை தனக்கு ஒரு முதல்வர் பதவி அளித்த அதிமுக கட்சிக்கே துரோகம் பண்ணி இரட்டை இல்லை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையை   மக்கள் விரும்பவில்லை. மேலும் அவர் பாஜக வின் மறைமுக ஊதுகுழலாக இருப்பதும் இந்த தேர்தலில் வெட்டவெளிச்சமாகியது. இந்த இடைதேர்தல் நடந்தால்  திமுகவோ அதிமுக அம்மா அணியோதான் வெற்றிபெறும் என்பது உறுதியாக தெரிந்தது. இந்த இடைதேர்தல் வைத்து நாம் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது என்று தெரிந்த உடன் பாஜக அரசு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளால் அதிரடி சோதனை நடத்த வைத்தது.

இந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக முக்கிய ஆவணங்களும் மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின. என தெரிவித்தது. ஆனால், எந்தவிதமான ஆவணங்களையும் வெளியிடவில்லை

இதைத்தொடர்ந்து டெல்லி தேர்தல் கமிஷன் தமிழகத்தின்  தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோரை டெல்லிக்கு அழைத்தது. அவர்கள்  டெல்லி சென்றனர். நேற்று காலை 10 அணி அளவில் தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்கு சென்ற அவர்கள் முதலில் தமிழக பொறுப்பை கவனிக்கும் துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்காவை சந்தித்து ஆர்.கே.நகர் தொகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை குறித்தும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது எனவும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய சொன்னார்கள்

அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி ராஜேஷ் லக்கானியுடனும், விக்ரம் பத்ராவுடனும் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று இரவு 7 மணி வரை நடந்தது.

இதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று நள்ளிரவு வெளியிட்டது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top