தனிநாடு கோரிக்கை; பிரான்ஸ் பேச்சு வார்த்தையில் ஈட்டா அமைப்பினர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

 

armed

பாஸ்க் தேசிய விடுதலை இயக்கம்   ‘ETA’ ஈட்டா என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பினர் தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு ஸ்பெயினை இணைத்து தனிநாடு உருவாக்க வேண்டி ஆயுதம் ஏந்தி போராடினார்கள் .

ஐரோப்பா கண்டத்தில் பிரான்சிலும், ஸ்பெயினிலும் ஈட்டா அமைப்பினர் இயங்கி வந்தனர். இந்த போராட்டத்தில் 800–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த ஈட்டா அமைப்போடு  பிரான்ஸ் அரசு 2011–ம் ஆண்டு போர் நிறுத்தம் செய்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தனர் அப்போதும்  ஆயுதங்களை கைவிடவில்லை.

இப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட முடிவு எடுத்தனர்.

பிரான்சில் உள்ள பாயோன்னே நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஈட்டா அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கினர். இது பாஸ்கியு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய நடவடிக்கையாக அமையும் என தகவல்கள் கூறுகின்றன.

art

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top