நெடுவாசல்; மீண்டும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

 

neduvasal

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு  எதிரான போராட்டத்தை மீண்டும் கையில் எடுப்பது தொடர்பான கூட்டம் இன்று நெடுவாசலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்கள் கூறினார்கள் அதே சமயத்தில்  மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்  அதன் பேரில்  3 கிராமங்களிலும் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை மறந்து மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மத்திய அரசின் அவ நம்பிக்கைச் செயலால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .  மத்திய அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் தொடரும் என்று நெடுவாசல் கிராம பொதுமக்கள் தெரிவித்திருந்னர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்ட குழுவினர் நேரில் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், போராட்டம் நடத்துவது தொடர்பாக நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் 100 கிராமங்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்பட உள்ளது.

நெடுவாசலில் அடுத்து எடுக்கப் போகும் போராட்டம் மிக வீரியமிக்கதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஏமாற்று வித்தைகளுக்கு அடிபணியாமலும் இருக்கும் வகையில் மனஉறுதியுடம்  செயல் பட திட்டங்கள் வகுக்கபட்டுள்ளதால்  தற்போது , நெடுவாசல் மீண்டும் ஒரு போராட்டக்களமாக மாறும் நிலை உருவாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top