அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

 

 

gettyimages

 

சிரியாவின் மீது அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்.மற்றும் அந்த பிராந்தியத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.இந்த சூழலில் நேற்று  ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைப்பெற்றது

சிரியா அதிபர் பஷர் அல்-அசத், மீண்டும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்க தூதர் நிக்கி ஹெலி தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற அவரச கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது மற்றும் அதை பரவலாக்குவது போன்றவற்றை நிறுத்தவேண்டும் என்றும்  தெரிவித்தார்.

“நாங்கள் இன்னும் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்குத் தேவை இருக்காது என்று நம்புகிறோம்” என்றார் அவர்.

தவறு செய்யும்போது சிரியாவுக்கு துணை நிற்பதாக ரஷ்யா மற்றும் இரானின் நடவடிக்கைகளை விமர்சித்த அவர், அது அஸாத் மேலும் பல கொலைகளைச் செய்வதற்கு ஊக்கமளிப்பதாகவே அமையும் என்று தெரிவித்தார்.

ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விளாடிமிர் சஃரன்கோவ்,, அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் இந்த தாக்குதல் அந்த பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க கருவூல செயலர் ஸ்டீவன் முனுசின் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளுக்கு அமெரிக்கா தயாராவதாக கூறினார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top