மத்திய பாதுகாப்புப் படை,வருமான வரித்துறை என பாஜக மிரட்டுகிறது;டிடிடி தினகரன்

 

 

dinakaran-01212-2-600

இன்று தமிழகத்தில் திடீரென தமிழக சுகாதாரத் துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சுமார் 35 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்

அதிகாலையில் இருந்து விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீடு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் திடீரென சோதனை செய்தனர்.

ஆர்.கே. நகரில் “நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற அச்சத்தால்தான் பாஜக என்னை மிரட்டுகிறது” என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் நேரிடையாகவே குற்றம் சாட்டியுள்ளார். எங்களை வருமான வரித்துறை, மத்திய பாதுகாப்புப்படை மூலம் பாஜக தொடர்ந்து மிரட்டி வருகிறது இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று தினகரன் கூறினார்.

நேற்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்று அவர் தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக சரத்குமார் தெரிவித்திருந்தார். தினகரனை சந்தித்த சில மணி நேரங்களிலேயே சரத்குமார் வீடு ரெய்டு செய்யப்படுவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வீட்டில் ஏன் ரெய்டு நடைபெறவில்லை என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்ததில் இருந்து பாஜக அதிமுக பன்னீர் செல்வம் அணி மூலம் தமிழகத்தில் கால் ஊன்றி விடலாம் என்று நினைத்து பல வழிகளில் தமிழ் நாட்டில் அதிமுக சசிகலா அணியை தொந்தரவு செய்தது. அது ஊழல் கட்சி என்று அதிமுக காரர்களை வைத்தே பேச வைத்தது.சொத்துகுவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலாவிற்கு தண்டனை பெற்று தந்தது.முதல் குற்றவாளிக்கு நூறுகோடி அபதாரம் விதித்தது ஆனால் அபதாரத்தை வசூலிக்கும் கர்நாடக மனுவை தள்ளுபடி செய்தது.அதிமுக தலைவியாக ஜெயலலிதா என்கிற பிராமண வகுப்பை சார்ந்தவர் இருந்தவரைக்கும் பாஜக தொந்தரவு செய்தது இல்லை ஆனால் இப்போது அதிமுக பிராமணர் அல்லாதவரிடம் இருப்பதால் இந்த தொந்தரவை பாஜக கொடுக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top