தென்னிந்தியர்களை தவறாக சித்தரித்து பேசிய பாஜக எம் பி தருண் விஜய்; பாஜகவின் உண்மை முகம்!

 

tharun

 

நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவின் நகர்வை ஆதரிக்கும் வகையில் பேசிய தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.

நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் என கூறப்பட்டது, இதற்கு பதில் அளித்த தருண் விஜய் இந்தியர்கள் இனவெறியர்கள் அல்லர் என்று கூறி  தமிழர்கள் உட்பட தென்னிந்திய மக்களோடு வாழ்கிற நாங்கள் எப்படி இனவெறிக்காரர்களாக இருக்க முடியும் என தென்னிந்திய மக்களின் உடல் நிறத்தை காரணமாக காட்டி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் முகநூலில்  பாஜகவின் தருண் விஜயை விமர்சித்து இருக்கிறார்கள்

தென்னிந்திய மக்களை குறிப்பாக தமிழர்களை பாஜகவின்  எம்.பி. தருண் விஜய் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் அண்மையில் ஆப்பிரிக்கா மாணவர்கள் தாக்கப்பட்டது சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் கூறியதாவது:

.இது குறித்த விவாதத்தில் பேசிய தருண் விஜய்  நாங்கள் இனவெறியர்களாக இருந்து இருந்தால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா என தென் இந்தியர்களுடன் நாங்கள் எப்படி வாழ்வோம்? நாங்கள் எங்களை சுற்றிலும் கருப்பு நிற மக்களை கொண்டு உள்ளோம்,” என கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கருத்துகள் வந்துள்ளதால்.

தற்போது கறுப்பு நிறம் குறித்து பேசிய கருத்துகளை மறுத்து அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் என்னுடைய கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு உள்ளது என விளக்கம் தெரிவித்து உள்ளார்.

இவ்விவகாரத்தில் இருந்து பா.ஜனதா மௌனமாக இருந்து வருகிறது இவ்விகாரம் தொடர்பாக டுவிட்டரில் மக்களின் கருத்துகளை  பதிவிட்டு வருவதால், தருண் விஜய் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பும் கேட்டு அதற்கும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

சமய ரீதியாக  இந்தியா மாறுபாடுகளை உள்ளடக்கியது, கலாசாரத்தில் கறுப்புநிற கிஷ்ணரை வழிபாடு செய்கிறோம், முதலில் நாம் இனவெறியை எதிர்த்தோம், பிரிட்டன் ஆட்சி காலத்தில் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். யாருடனும் நாம் இனவெறி கொண்டிருக்கவில்லை என விளக்கம் அளித்து உள்ளார்.

தேசத்தின் பலபகுதியிலும் நாம் பலதரப்பட்ட மக்களை கொண்டு உள்ளோம், நிறத்திலும், அவர்களுக்கு எதிராக நாம் எப்போதும் பாகுபாடு காட்டவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

என்னுடைய கருத்தை தெரிவிக்க என்னுடைய வார்த்தை போதுமானதாக இல்லாமல் இருந்திருக்கலாம், வருந்துகிறேன். என்னுடைய கருத்தை மீறி நான் மாறுபாடுடன் பேசியதாக உணர்கின்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என கூறிஉள்ளார்.

இதுகுறித்து கனிமொழி பேசுகையில் இது தேசவிரோத கருத்தாகும் என கூறிஉள்ளார். “பாரதீய ஜனதா அவருக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கும் என நம்புகின்றேன்,” என கூறிஉள்ளார்.

காங்கிரஸ் தரப்பில் குஷ்பு பேசுகையில், தருண் விஜய் கருத்து வினோதமானது மற்றும் பொறுப்பற்றது. நிறம் எங்கிருந்து வந்தது… தருண் விஜயிடம் இருந்து வந்த இந்த கருத்தானது கண்டிக்கதக்கது, இங்கே நிறத்தை பார்ப்பதை பார்க்க வேண்டிய அவசியமில்லை ” என கூறிஉள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top