சவுதியில் சிக்கித்தவித்த 14 தமிழர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ‘ஐ.எஸ்.எஃப்’.மீட்டு தாயகம் அனுப்பியது!

 

 

sdpi-2the

வெளிநாடுவாழ் தமிழர்களின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரிவான இந்தியன் சோசியல் ஃபோரம் என்கிற அமைப்பு சவுதியில் சிக்கி தவித்த 14 தமிழர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது

தமிழகத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல் அஜ்ரி ஓவர் சீஸ் என்ற நிறுவனத்திற்கு இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு 17 இந்தியர்கள் 1500 ரியால் (ரூ. 25000) சம்பளத்திற்கு வேலைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு 650 ரியால் (ரூ. 10000) மட்டுமே வழங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து வறுமையின் காரணமாக வேலைக்கு வந்ததால் எதனையும் பொருட்படுத்தாமல் நிர்ணையிக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்கு 17 இந்தியர்களும் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு நிர்ணையிக்கப்பட்ட இரண்டு வருடங்கள் முடிவடையும் வேலையில், வேலை பார்க்கும் நிறுவன அதிகாரியிடம் சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என முறையிட்டனர். ஆனால், அந்த அதிகாரிகள் இவர்களை ஏமாற்றும் விதமாக மூன்று வருடங்களுக்குத்தான் உங்களை வேலைக்கு எடுத்தோம் என கூறியுள்ளனர். இந்த பிரச்சினையை சம்பந்தப்பட்ட 17 இந்தியர்களும் உடனடியாக வெளிநாடுவாழ் தமிழர்களின் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரிவான இந்தியன் சோசியல் ஃபோரம் அமைப்பின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தனர். இந்த பிரச்சினையில் ஐ.எஸ்.எஃப். நிர்வாகிகள் சட்டரீதியாக இந்திய தூதரகத்தையும், சவூதி அரசையும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்கி சொந்த நாட்டுக்கு இன்று (06.04.2017) சவூதியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

sdpi3

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 14 தமிழர்களான தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கன்பேட்டை கிராமத்தை சார்ந்த ஜெகன், எருக்கூர் கிராமத்தை சார்ந்த அகிலன், புதுக்கோட்டை மாவட்டம் சொக்கம்பட்டி கிராமத்தை சார்ந்த ராமு, புதுக்கோட்டை மாவட்டம் அரப்பக்குளம் கிராமத்தை சார்ந்த ரவி, நாகப்பட்டினம் மாவட்டம் மாயவரத்தை சார்ந்த ஹாஜி முகமது, மதுரையை சார்ந்த கணேஷன், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிராமத்தை சார்ந்த முருகேசன், அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், புதுச்சேரி மாநிலம் வீரநாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அரபகுமரன், தூத்துக்குடியை சார்ந்த பிரின்ஷி, இராமேஸ்வரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தை சார்ந்த காளிமுத்து, முத்து கிருஷ்ணன், அரியலூர் மாவட்டம் அரண்கோட்டை கிராமத்தை சார்ந்த கார்த்தி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சார்ந்த பிரபாகரன் மற்றும் கேரளாவை சார்ந்த 3 இந்தியர்களும் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். பிறகு டெல்லியில் இருந்து மாலை 03 மணியளவில் கேரளாவை தவிர்த்து மற்ற 14 தமிழர்களும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். வருகை தந்தவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்று தேவையான உதவிகளை செய்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்.

அப்போது கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

வருமையின் காரணமாக இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லக்கூடியவர்களை அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய இந்திய தூதரக அதிகாரிகள் சொந்த நாட்டில் இருந்து வரக்கூடியவர்களின் நிறுவனங்களிடம் தமிழர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், வெளிநாடுவாழ் இந்தியருக்கான தனி வாரியம் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும், பிரச்சினைகளை சந்திக்கும் தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவியை அரசு கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top