அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு,அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறை சோதனை

 

xvijay-bhaskar-

 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

 

வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு மயிலாப்பூரில் உள்ள உறவினர் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட சென்னையில் 20 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் நேரில் சோதனை மேற்கொண்டு வருகிறார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top