64-வது தேசிய திரைப்பட விருதுகள்; சிறந்த தமிழ் படமாக – ‘ஜோக்கர்’ தேர்வு .

 

jokkar

 

64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார்.சோமசுந்தரம் நடிப்பில் உருவான இப்படம் கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடமாகும். ‘ஜோக்கர்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு அறிவிக்கபட்டுள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தப்பக்கம்’ பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருது வென்றுள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’24’ படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக திருவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும், சிறந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கான விருதும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திப் படமான ‘ரூஸ்டம்’ (RUSTOM) படத்தின் நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அக்‌ஷய்குமார் பெறுகிறார்.சிறந்த துணை நடிகைகாண  விருதை டங்கல் படத்தில்  நடித்த – ஜாய்ரா வாசிம் பெற்றுள்ளார்

64-வது தேசியத் திரைப்பட விருதுகள்  இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு, விருதுகளை அறிவித்துவருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top