64-வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் படம் ஜோக்கர், சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

 

26TH_VAIRAMUTHU_316583f

 

64-வது தேசிய திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு தேசிய விருதுகளை அறிவித்து வருகிறது. இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிடா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் ஜோக்கர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. கிராம மக்களின் சுகாதார பிரச்சனையை விளக்கும் படமாக இருந்து பலரது கவனத்தையும், ஆதரவையும் இப்படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மதுரை திரைப்படத்தில் எந்தபக்கம் என்ற பாடலை எழுதியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லம்மா என்ற கன்னட படத்திற்கு இசையமைத்த பத்மநாபனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 24 தமிழ் திரைப்படத்தின் கேமராமேன் திருநாவுக்கரசுவிற்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ருஸ்தம் படத்தில் நடித்த அக்‌ஷய்குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top