ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு ; ஆங் சான் சூ சி மறுப்பு

மியான்மரில் சிறுபான்மை இனத்தவரான ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினர் மீது மனித உரிமை மீறல் நடந்ததாக செய்திகள் பரவலாக வந்துள்ள போதிலும், ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக இன அழிப்பு நடந்ததாக கூறப்படுவதை மறுத்த மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூ சி இன அழிப்பு என்ற வார்த்தை பயன்பாடு மிகவும் கடுமையானது என்று கூறியுள்ளார்..

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மரில் ரொஹிஞ்சா பிரிவினருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக புலப்பெயர்ந்த குடியேறிகளாக அவர்கள் மியான்மரில் பார்க்கப்படுகின்றனர். மியான்மரில் ரொஹிஞ்சா பிரிவினர், அடிக்கடி அரசு மற்றும் பொது மக்கள் ரீதியான பாரபட்சங்களை சந்தித்து வருகின்றனர்.

 

_rohingyagirl

கடந்த 2012-ஆம் ஆண்டில் நடந்த இன ரீதியான வன்முறையால் இடம் பெயர்ந்த பல ஆயிரக்கணக்கான ரொஹிஞ்சா மக்கள் தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மை மாதங்களில், ரக்கீன் மாநிலத்தில் அரசு எடுத்து வரும் ராணுவ நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 70,000 பேர் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றனர். இது குறித்து ஒரு தாக்குதலில் 9 போலீசார் இறந்ததையொட்டி, மியான்மர் அரசு ராணுவ நடவடிக்கை எடுத்தது.

ராணுவ நடவடிக்கையில், ரொஹிஞ்சா பிரிவினர் மீது தவறான அணுகுமுறையுடன் ராணுவம் பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் சித்ரவதை ஆகிய குற்றங்களை இழைத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க தான் ஒரு விசாரணை நடத்தப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு கடந்த மாதத்தில் அறிவித்தது.

இக்குற்றச்சாட்டுகளை மியான்மர் அரசு ஏற்கனவே மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரொஹிஞ்சா பிரிவினருக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காத ஆங் சான் சூ சியின் மெளனம் மனித உரிமைகளின் பாதுகாவலர் என்ற அவரது பெருமையை சேதப்படுத்துவதாகவே பலரும் கருதுகின்றனர்.

ரங்கூனில் ராணுவத்தால் பல தசாப்தங்கள் கட்டாய வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட சூ சி, 1990-களில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாக அறியப்பட்டு பிரபலமானவர் ஆவார்.ஆனால், இந்த விஷயத்தில் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார் என்று சர்வதேச அளவில் அழுத்தத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில், முதல் முறையாக நேர்முக பேட்டியளித்துள்ள ஆங் சான் சூ சி, தன்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தான் ஏற்கனவே பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ”ரக்கீன் மாநிலத்தில் சென்ற முறை கலவரங்கள் வெடித்தது குறித்து கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

”பத்திரிக்கையாளர்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் விடையளித்தாலும், அவர்கள் நான் எதுவுமே பேசவில்லை என்று கூறுகின்றனர். சிலர் நான் ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று விரும்புவதாலும், ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பிரிவை கண்டிக்க வேண்டும் என்று விரும்பினால், நான் அதை அவ்வாறு செய்ய முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு ராணுவத்திடம் எல்லா அதிகாரமும் [லகான்] உள்ளது என்று கூறப்படுவதை சூ சி மறுத்தார்.

”பாலியல் வல்லுறவு, அழிவு மற்றும் சித்ரவதை என்று அனைத்தையும் நடத்த ராணுவத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால்,நாட்டின் எப்பகுதிக்கும் சென்று போராட, நாட்டை காக்க ராணுவத்துக்கு அதிகாரமுள்ளது. இது அரசியல் அமைப்பில் உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான அம்சங்கள் மற்றும் அதிகாரங்கள் ராணுவத்தின் வசமுள்ளது” என்று சூ சி தனது பேட்டியில் தெரிவித்தார்.

_rohi

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு ரொஹிஞ்சா சம்பவம் குறித்து தனது அரசு எடுத்த நடவடிக்கைகளை ஆதரித்து ஆங் சான் சூ சி கருத்து வெளியிட்டார்.

மியான்மரில் நடந்த மோதல்களால், அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்ற ரொஹிஞ்சா மக்கள் குறித்து ஆங் சான் சூ சி கூறுகையில், ”மியான்மருக்கு திரும்பி வந்தால், அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சிலர் அவ்வாறு திரும்பியுள்ளனர். மியான்மருக்கு திரும்புவது அவர்களின் விருப்பம்” என்று தெரிவித்தார்.

மேலும் இன அழிப்பு என்ற வார்த்தை பயன்பாடு மிகவும் கடுமையானது என்ற ஆங் சான் சூ சி.

அதே சமயத்தில் நாடு திரும்பும் ரொஹிஞ்சா முஸ்லிம் பிரிவினரை திறந்த மனதுடன் ஆரத்தழுவி மியான்மர் வரவேற்கும் என்றுஆங் சான் சூ சி தெரிவித்துள்ளார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top