தமிழ்நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

 

vijaya paskar

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அவரது உறவினர்களின் வீடு, அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் நடிகர் சரத்குமார் வீடு என பல இடங்களில் வருமான வரித்துறையினர்  இன்று சோதனை நடத்திவருகின்றனர்

சென்னை,க்ரீன் வேஸ் சாலையில் உள்ள விஜய பாஸ்கரின் இல்லம், எழும்பூரில் உள்ள ஒரு வீடு உள்பட அவருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை 6 மணி முதல் வருமானவரித்துறையினர்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல்குவாரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

அதே போல, நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். (ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சரத்குமார், டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்து இருந்தார் என்பதும் இதில் குறிப்பிடதக்கது)

வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் 30 இடங்களில்  சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வரி ஏய்ப்புப் புகார், தற்போது நடைபெறும் ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகார் எதிரொலியாக இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top