நுண் கண்காணிப்பு வளையத்தில் ஆர்.கே.நகர் .

 

notdukal

 

சென்னை: ஆர்.கே.நகரில் உள்ள பணப்பட்டுவாடாவை தடுக்க நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்து வருகிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு வகையில் கண்காணித்து வந்தாலும், அதையும் மீறி ஏதாவது ஒரு வழியில் பண வினியோகத்தில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தேர்தல் ஆணையத்திடம் இடைதேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு சாராரும், இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று மறு சாராரும் கோரி வருகின்றனர். பணம் வினியோகத்தை தடுக்கும்  நடவடிக்கை குறித்து தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து  கூறியதாவது;-

இந்தியாவிலேயே முதல் முறையாக அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக நுண்கண்காணிப்பு பார்வையாளர்கள் 70 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் உள்ள ஒவ்வொரு தெருக்கள் வாரியாக இரு சக்கர வாகனங்களில் கண்காணிப்பாளர்கள் ரோந்து மேற்கொள்வர்.

அச்சமயம் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் கட்சியினர் மீது நடவடிக்கை தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். ஒவ்வொரு இரு சக்கர வாகனத்தில் ஒரு பார்வையாளருடன் ஒரு போலீஸ்காரரும உடன் செல்வார். குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் குறித்து உண்மையான புகார்கள் வந்தால் அங்கு சென்று அதை தடுத்து நிறுத்துவதோடு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்கள்.

நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் சுழற்சி முறையில் , மூன்று ஷிப்ட்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மொத்தம் உள்ள 256 வாக்குச் சாவடிகளிலும்  தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இது தவிர 30 பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணி செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் மத்திய அரசுப் பணியாளர்கள் மட்டுமே நுண் கண்காணிபளர்களாக பணியமர்த்தப்பட உள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்  தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top