​நீதியரசர் ராஜேஷ்வரன் விசாரணை கமிஷன்.

 

film1

 

ஜல்லிக்கட்டு போராட்டதில் நடந்த  கலவரம் தொடர்பான விசாரணையில் பாதிக்கபட்ட பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி பிரமாண வாக்கு மூலம் அளிக்கும்படி தனிநபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஒய்வுபெற்ற நீதியரசர் ராஜேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றிய நிலையில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி போராட்டக்காரர்களிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், நிரந்தர சட்டத்திற்காக காத்திருந்த போராட்ட குழுவினர் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, பல இடங்களில் காவல்துறை தடியடி நடத்தியது.

சென்னையில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.இந்தத் தாக்குதலில் பொதுமக்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. சென்னையில் நடுக்குப்பம் மீன் சந்தை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த கலவரங்களில் பொதுச் சொத்துகளுக்கும் தனிச் சொத்துகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் கலவரம் குறித்து விசாரிக்கவும், சட்ட – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதற்கான  காரணத்தை அறியவும்,அதே சமயத்தில் காவல்துறை கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டதா என்பதை விசாரணை செய்யவும் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்தக் கலவரம் தொடர்பான தகவல்களை அளிக்க விரும்புபவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் இது தொடர்பான பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்யலாம் என ஆணையம் தெரிவித்தது.

தற்போது ,இது தொடர்பாக விசாரணை ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பாக இது வரை 128 பிரமாண பத்திரங்கள் வாக்குமூலம் வந்துள்ளதாக கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து அச்சமின்றி மக்கள் பிரமாண வாக்கு மூலம் அளிக்கலாம்  வரும் 7ம் தேதி மீண்டும் நாளிதழில் விளம்பரம் அளித்திட உள்ளதாகவும், பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி  பாதிக்கப்பட்ட விஷயங்களை தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் தமது தலைமையில் இது குறித்த விசாரணை நான்கு மாதங்கள் நடைபெறும் என தெரிவித்த அவர். விசாரணையின் போது அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பப்டும் எனவும் இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட  அனைத்து போட்டோ மற்றும் வீடியோ ஆதராங்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top