அமெரிக்கர்களின் இணையதள ரகசியம் வெளியிடும் புதிய சட்டம் ; கையொப்பமிட்டார் டிரம்ப் .

 

drump

 

அமெரிக்கர்களின் இணையதள பயன்பாட்டாளர்கள் தொடர்பான ரகசியங்கள் இனி அவர்களின் கவனத்துக்கு வராமலேயே அம்பலமாகும் புதிய சட்டம் அதிபர் டொனால்ட் கையொப்பமிட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் வாழும் மக்கள் இணையதள பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், சிலரை பற்றிய இணைய பயன்பாடு தொடர்பான தகவல்களை கள்ளத்தனமாக ஒற்றறிந்து, அவற்றை அந்நபருக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு விலைக்கு விற்கும் கும்பலும் பெருகி வருகிறது.

இந்த திருட்டை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டில் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது இணையதள பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்நாட்டிலுள்ள பல்வேறு புலனாய்வு முகமைகளின் ஒருங்கிணைந்த அறிவுறுத்தலின் பேரில்தான் ஒரு தனிநபர் தொடர்பான இணையதள பயன்பாட்டு ரகசியங்களை பெற முடியும் என்ற சட்ட பாதுகாப்பு இதன் மூலம் கிடைத்தது.

எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு கிடைத்த பாதுகாப்பு கேடயமாக கருதப்பட்ட இந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், இந்த சட்டத்தை செல்லாக்காசாக மாற்றும் புதிய சட்டத்தை கொண்டுவர அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அரசு தீர்மானித்தது. தேவைகளுக்கு ஏற்ப அதிபரின் ஒற்றை கையொப்பத்தை வைத்தே ஒருவரின் இணையதள பயன்பாடு தொடர்பான ரகசியங்களை எளிதில் அறிந்துகொள்ள வகை செய்யும் இந்த புதிய சட்ட மசோதா அமெரிக்க பாராளுமன்ற மேலவையில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆதரவாக 50 எம்.பி.க்களும், எதிர்த்து 48 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இந்நிலையில், இதன்மீது பாராளுமன்ற பொதுச்சபையில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அமல்படுத்துவதற்கு ஆதரவாக 215 எம்.பி.க்களும், எதிர்த்து 205 எம்.பி.க்களும் வாக்களித்துள்ளனர்.

இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையொப்பமிட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் இந்த சட்டத்தால் அமெரிக்காவில் வாழும் மக்களின் இணையதள பயன்பாட்டாளர்கள் தொடர்பான ரகசியங்கள் இனி அவர்களின் கவனத்துக்கு வராமலேயே அதிபரின் ஒற்றை கையொப்பத்தால் இனி பிறருக்கு அம்பலமாகி விடும்.

இணையதளச் சேவை வழங்கும் எந்த நிறுவனங்கள் வேண்டுமானாலும் பணத்துக்காக ஆசைப்பட்டு யாருடைய ரகசியத்தையும், யாருக்கு வேண்டுமானாலும் இனி விலைக்கு விற்கலாம் என்ற சூழல் இந்த புதிய சட்டத்தால் உருவாகலாம் என்ற அச்ச உணர்வும், பீதியும் தற்போது அங்குள்ள மக்களின் மனதில் எழுந்துள்ளது மேலும் இணையதள வாசிப்பாளரிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top