‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ சீனாவிற்கு இந்தியா எச்சரிக்கை

திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது. இப்போது வரை தலாய்லாமாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது.

 

இதற்கிடையில், அருணாச்சல முதல்-மந்திரி பெமாகண்டு அழைப்பின் பேரில் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அருணாசலப் பிரதேசம் செல்கிறார். மாநிலத்துக்கு இந்தியத் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் செல்வதை சீனா தொடர்ந்து ஆட்சேபித்து வருகிறது. இந்நிலையில் தலாய் லாமா  பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இருதரப்பு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும் என சீனா எச்சரித்தது. ஆனால் இவ்விவகாரத்தில் ஸ்திரமான நடவடிக்கையில் இருக்கும் இந்திய அரசு சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்து, தலாய்லாமா அருணாசலப் பிரதேசம் செல்வதை உறுதிசெய்தது.

lama

இந்நிலையில் சீனாவின் எதிர்ப்புக்கு, இந்தியா உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறிஉள்ளது.

 

மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு பேசுகையில் தலாய் லாமாவின் அருணாச்சல் பயணம் முற்றிலும் மதம் சார்பானது, இதற்கு அரசியல் சாயம் கொடுக்க வேண்டாம். சீனாவை சேர்ந்த மக்களுடனும் நல்ல நட்புறவை கொண்டு இருக்கவே அருணாச்சல பிரதேச மக்கள் விரும்புகிறார்கள். சீனாவுடன் பிரச்சனையை கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட்டது கிடையாது, அதேபோன்று இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்திலும் சீனா தலையிடாது என எதிர்பார்க்கிறோம். அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும், தலாய் லாமாவின் அருணாச்சல பிரதேச பயணத்தில் யாருக்கும் பிரச்சனை இருக்காது என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறிஉள்ளார்.

 

மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு ‘அனைத்து சமூதாய மக்களின் மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்’என்று பேசியது சமூக ஆர்வலர்களிடையே கேள்வியை எழுப்பி இருக்கிறது முதலில் இந்தியா அனைத்து மத உணர்வுகளுக்கு மதிப்பளித்ததா? இந்தியாவில் மாற்று மத நம்பிக்கை கொண்டவர்களையும் மதத்தை விமர்சனம் பண்ணுபவர்களையும் சுட்டு கொல்வதை வாடிக்கையாக கொண்ட பாஜக சீனா வுக்கு அறிவுரை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.என்கிறார்கள்.மற்றும் திபெத் விசயத்தில் இந்தியாவோடு முரண்படும் சீனா தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இந்தியாவோடு கை கோர்த்து நிற்கிறது.இப்படி அவரவர் நலன்களுக்கு மட்டுமே செயலாற்றுவது உலக நாடுகளின் வாடிக்கையாகி விட்டது

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top