புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுக திட்டம் ; ரிசர்வ் வங்கி

 

rupai

 

இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது என இந்நகர்வு குறித்து தெரிந்த இருவர் கூறி உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது. புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ஆர்.பி.ஐ. நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் மாதம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர்கள் கூறி உள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் கிடையாது என்பதால்  வெளியிடும் என்று எர்த்திபார்க்கபட்டுவருகிறது.

மேலும்  புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது இவ்வருட ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 200 ரூபாய் மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இது தொடர்பாக ஆர்.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

200 ரூபாய் நோட்டுகளை பற்றி  அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவராத நிலையில் இத்திட்டம் செயல்படுமா என்று எதிர்பார்க்கபடுகிறது

ஏற்கனவே மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த வருடம் நவம்பர் மாதம் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, புதியதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்பட்டது. இதற்கிடையே புதியதாக 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியது. மத்திய அரசு கள்ளநோட்டுகள் அச்சடிப்பை ஒழிக்க மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை இணைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top