சீனா,ரஷ்யா போன்ற வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த தமிழக விவசாயிகளின் போராட்டம்

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இன்று  21 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு  ஆதர்வாக பிற மாநில விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

former

 
தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு தமிழகம்  மட்டுமின்றி பிற நாடுகளில் உள்ள  தமிழர்களும் ஆதரவு தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக விவசாயிகளின் போராட்டம் சீனாவிலும்  ரஷ்யாவிலும், கவனத்தை ஈர்த்து உள்ளது. சீனா, மற்றும் ரஷ்யாவின் பத்திரிகைகளும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை செய்தியாக வெளியிட்டு உள்ளன.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top