இக்வேட்டரில் மீண்டும் இடதுசாரி கட்சி வெற்றி; லெனின் மோரெனோவுக்கு அசாஞ்ச்சே வாழ்த்து

 

 

equatar

 

இலத்தின் அமெரிக்க  நாடான இக்வேட்டரில் நடந்த அதிபர் தேர்தலில் இடது சாரி கட்சியான  ஆளும் கட்சியின்  வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.   தற்பொழுது வெற்றி பெற்றுள்ளது  லெனின் மோரெனோ ஒரு மாற்று திறனாளி என்பதும், இவர் கடந்த ஆட்சியில்  துணை அதிபராக  இருந்தவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

லண்டனில்  உள்ள  இக்வேடார் துதரகத்தில்  அமெரிக்க    உளவுத்துறை  மற்றும் பல்வேறு  அரசுகள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட விக்கீ லீக்சின் அசாஞ்ச்சே  அடைக்கலம் ஆகி இருக்கறார். எனவே, இந்த தேர்தல் முடிவு உலகமுழுவதும் பலரால் எதிர்பார்க்கப் பட்டதாக இருந்தது

நேற்று (2.4.2017)  இரவே 96 % சதவிகித வாக்குகள் எண்ணபட்ட நிலையில் பெரும்பான்மை பெற்று  வெற்றி பெற்றுள்ள லெனின் மோரெனோ தனது முன்னாள் அதிபர் ரபிள் மற்றும் துணை அதிபரோடு மேடை  ஏறி தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது  இந்த வெற்றி குறித்து சர்ச்சை  கிளப்பும்  எதிர்கட்சியினரோடு  நல்லிணக்கத்தோடு  தொடர்ந்து  நாம் உழைப்போம் என்று கூறியுள்ளார்.

 

equ-2

லெனின் மோரெனோ வின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் கொடிகளோடு வீதியில் ஆடிப்  பாடி இந்த வெற்றியை  கொண்டாடினர்   கூட்டத்தில்  நடமாடிய  34    வயதான  விவசாய தொழிலாளர் மார்சல் இது குறித்து பேசும்போது கடந்த பத்து ஆண்டுகளில் எங்கள் வாழ்வு மிக சிறப்பானதாக மாறிவுள்ளது. இந்த புரட்சிகரமான  வெற்றியை  இன்னும் சிறப்பாக முன்னெடுத்து செல்வோம் என்றார். கடந்த  மூன்று  தேர்தலில் வெற்றி பெற்ற ரபீல் 15 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இக்வேடாரின் வறுமை ஒழிப்பு, மருத்துவம் மற்றும்  அடிப்படை வசதிகளில் மிக  பெரிய மாற்றங்களை கொண்டுவந்தவர்,  அது மேலும்  தொடரும்  என்றும் தெரிவித்தார்.

ஆனால், எதிர் கட்சினர் தங்களின் திட்டங்களாக தொழில் வளர்ச்சியை முன்வைத்து தேர்தலை சந்தித்தனர் இதனை இக்வேடார் மக்கள் புறக்கணித்துள்ளனர். அதே போல நாங்கள் வெற்றி பெற்றால்  லண்டனில் உள்ள இக்வேடார் தூதரகத்தில் இருந்து விக்கிலிக்ஸ் அசாஞ்ச்சே ஒரு மாதத்தில் வெளியேற்ற படுவார் என்றும் தெரிவித்து இருந்தார்.  தேர்தலில்  வாக்குகள்  மூலம்  இக்வேடார் மக்கள் அசாஞ்ச்சேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும்,  இந்த தேர்தல் முடிவுகள் லத்தின் அமெரிக்க  அரசியலில் சில  பிராந்திய  மாற்றங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இக்வேடாரின் மேரோனாவின் இந்த வெற்றி மீண்டும் லத்தின் அமெரிக்காவினை இடது சாரிகளின் கட்டுபாட்டில் வைத்திருக்கும்

 

equ3

“ஒருவேளை மேரோனா தோல்வி அடைந்திருந்தால் அது அர்ஜெண்டினாவிலும், அடுத்து உள்ள பொலிவியன் ரெபரண்டதிலும் இடது சாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்’’  என்றும்  பிரேசில்  தொழிலாளர் கட்சியினர்  கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தேர்தலின் போது தற்போது தோல்வி அடைந்துள்ள குயிலெர்மோ லஸ்ஸோ பிரச்சாரத்தில் பேசும்போது  ‘’இந்த  தேர்தல் நம் பாதையை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கிறது, நாம் வெனிசுலாவின் வழியில் செல்ல வேண்டுமா  அல்லது  நம் மாகானத்திற்கு தனி பாதையை அமைக்க வேண்டுமா? என்று முடிவெடுக்கும் இடமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.  ஆனால் மக்கள் தற்பொழுது லெனின் மோரெனோ வை தேர்ந்தேடுத்திருகிறார்கள்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top