பாஜக – ஓ.பன்னீர்செல்வம் உறவு; சிஆர்பிஎப் பாதுகாப்பு ஏன்?

 

 

Paneer

 

மத்திய அரசு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எந்த அரசு பதவியும் வகிக்காதவர்,பெரிய கட்சியில் கூட இல்லாதவர்.ஒரு சாதாரண அரசியல்வாதி.இன்னும் சொல்லப்போனால் தன்னை முதலமைச்சராக்கிய அதிமுக கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர்.அவருக்கு ஏன்  சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு! அப்படி என்ன அவர் உயிருக்கு பாதுகாப்பற்ற தன்மை அல்லது நெருக்கடி வந்தது.சாதாரண மிரட்டல் போன்காலுக்கெல்லாம்  சிஆர்பிஎப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டால் மக்கள் வரி பணம் என்னாவது என்ற கேள்வியை பாஜக அரசை நோக்கி சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்

ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு மாநில போலீஸார்தான் தற்போது பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த மார்ச் 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அளித்தனர்.

தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல்கள் வருகிறது என்றும் ராஜ்நாத்சிங்கிடம் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரர்கள் 11 பேர் எப்போதும் உடனிருப்பார்கள். இவர்களுக்கு துப்பாக்கியும் வழங்கப்பட்டு இருக்கும். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாதுகாப்பு கேட்ட உடனே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) அனுப்புகிறார் என்றால் பன்னீர் செல்வத்துக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் உள்ள உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.பாஜக தமிழ் நாட்டில் பன்னீர் செல்வத்தின் மூலமாக மறைமுக ஆட்சி செய்ய நினைக்கிறது.வெறும் 12 எம்எல்எ வை வைத்துக்கொண்டு இப்படி ஆட்டம் போடும்,தமிழ்நாட்டை காட்டிக்கொடுக்கும் பன்னீர்செல்வம் ஆட்சிக்கு வந்தால் பாஜக காரர்களுக்கு நாட்டை அடகு வைத்து விடுவார் என்று அதிமுக வின் சில உண்மை தொண்டர்கள் கூறுகிறார்கள்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top