பொள்ளாச்சி பகுதியில் வறட்சியால் 200 குளம்- குட்டைகள் வறண்டன

நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களுக்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணை அடிப்படை நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணைக்கு வடகிழக்கு, மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர் வரத்து ஏற்படுகின்றது மேலும் மழை காலங்களில் இந்த குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்.

HTT

இதன் காரணமாக இந்த நீர் மற்றும் கிணற்று நீரை வைத்து வாழை, தென்னை, கத்தரி, தக்காளி, மக்காச்சோளம், பொறியல் தட்டை, மா, சப்போட்டா உள்ளிட்ட பயிர்வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றார்கள். இதனால் விவசாயம் சார்ந்த தொழில்கள் நெகமம் பகுதியில் அதிகளவில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நெகமம் சுற்றுப் பகுதியில் இந்த ஆண்டு தென்மேற்கு , வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. எனவே விவசாய சாகுபடி குறைந்து போனது.எனவே வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை காலமும் தொடங்கியது ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.

இதன் காரணமாக அணைகளுக்கு போதிய நீர் வரத்தும் இல்லாமல் போனது. குளம்,குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை இதனால் பாசனம் பெறும் பகுதிகளில் வறட்சி நிலவி வருகின்றது.

இதையடுத்து தென்னை, வாழை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்த விவசாயிகள் வறட்சியின் பிடியில் இருந்து அவற்றை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளில் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் வறட்சியை சமாளிப்பதற்காக விவசாயிகள் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்தாலும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாயதொழிலில் ஈடுபட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.இதன் காரணமாக அதிகப்படியான விவசாய நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாக காட்சியளிக்கிறது.

மேலும் வறட்சியின் தாக்கத்தால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் தங்களது நிலங்களை விற்பனை செய்து விட்டு நகரங்களை நோக்கி குடி பெயர்ந்து வருகின்றனர். இதனால் அதிகப்படியான விவசாய நிலங்கள் வீட்டு மனையிடங்களாக மாறி வருகின்றது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 200 க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன இவை அனைத்தும் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள், பொது மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top