கொல்கத்தாவில் தீங்கு விளைவிக்ககூடிய பிளாஸ்டிக் முட்டைகளை விற்பனைசெய்தவர் கைது.

பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக பரவிய தகவலால் நகரம் முழுவதும் உள்ள மக்கள் கடந்த 2 நாட்களாக முட்டைகள் வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் முட்டைகள் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மற்றொரு முட்டை விற்பனையாளர் சமீம் அன்சாரி என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சுமித்திடம், சமீம் முட்டைகள் வாங்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை போலீசார் சுமித்திற்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த பிளாஸ்டிக் முட்டைகள் ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கொல்கத்தா முழுவதும் வதந்தி பரவிவருகிறது.இது தொடர்பாக கொல்கத்தா, ஹவுரா, பர்த்வான் தெற்கு, பர்த்வான் வடக்கு ஆகிய பகுதியை சேர்ந்த குடிமையியல் அதிகாரிகள் மார்க்கெட்டுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பிளாஸ்டிக் முட்டைகள் நுகர்வோருக்கு குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் தீங்கு விளைவிக்கக் கூடியவை என, ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top