புதிய பிரச்சனையில் சிக்கிய சிம்பு – நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’

ithu namma aaluசிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ். ‘இது நம்ம ஆளு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வேகமாக முடிந்தது. நயன்தாரா முகத்தில் நிறைய சிரிப்போடு வந்து நடித்து கொடுத்தார். ஆனால் இப்போது அவரிடம் மாற்றம் தெரிகிறதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு போகாமல் இழுத்தடிக்கிறாராம்.

பேசிய சம்பளத்தை தருவார்களா என்ற சந்தேகம் கிளம்பியதே இதற்கு காரணம் என்கின்றனர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறதாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top