நெடுவாசல் 100 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

 

 

hcbn_

 

பசுமை வீடு கட்டுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு கடந்த திங்கட் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் நெடுவாசலில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அரசு சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இதில், திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட நெடுவாசல், வடகாடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரிப் படுகை பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஜெம் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. என்றும். நெடுவாசல் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆழ்துளை கிணறுகளை அகற்றி விளைநிலங்களாக மறுசீரமைத்து 3 மாதங்களில் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top