மதுரையில் எச்.ராஜா உருவப்பொம்மை எரிப்பு; காங்கிரசார் கைது

 

 

cong

 

பா.ஜ.க.வின் தேசிய செயலாளரான எச்.ராஜா, சமீபத்தில் அளித்த பேட்டியின் போது சோனியா காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மதுரையில் இன்று மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காங்கிரசார், தமுக்கம் தமிழ் அன்னை சிலை முன்பு இன்று கூடினார்கள். அங்கு வைத்து எச்.ராஜாவின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உருவப் பொம்மையை பறித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் செயலை கண்டித்து காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்யது பாபு, சேகர், துரையரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் தமுக்கம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top