மதுரையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுபவர்களை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது

 

madurai

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், மதுரையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அலுவலகத்தை முற்றுகையிட்ட திராவிடர் விடுதலைக்கழகம் , புரட்சிகர இளைஞர் முன்னனி, நாணல் நண்பர்கள், மே17 இயக்கம்,தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்த்தேச மக்கள் கட்சி, மருது மக்கள் இயக்கம், வனவேங்கைகள் ஆகிய இயக்கத்தைச் சார்ந்த 14 தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.

 

போராடுகிற விவசாயிகளுக்கு நிவாரணத்தையும், கடன் தள்ளுபடியையும், காவேரி நீரையும் பெற்றுத்தர முடியாத தமிழக அரசு சனநாயக ரீதியில் போராடும் தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது

‘’மத்திய பாஜக-மோடி அரசை எதிர்த்து குரல் கொடுக்கவும், போராடவும் வக்கற்ற அதிமுக அரசு போராடும் இளைஞர்களை அடக்குகிறது. சனநாயகப் போராட்டங்களைக் கூட பிணை இல்லாத வழக்கில் கைது செய்யும் தமிழகத்தின் காவல்துறை தமிழின விரோதியாக நடந்துகொள்கிறது’’. என போராடும் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தார்கள் .

 

‘’எப்போதும் போராடும் தோழர்களை கைது செய்து மாலை விட்டுவிடுவது நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால் இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு பாஜக வின் அடி வருடியாக போராடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும்  பிணையில் வரமுடியாத வழக்குகளை போடுவது என்று   தமிழக காவல்துறையை பாஜக வின் கூலிப்படை போல பாவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அறிவித்தார்கள் நேற்று இரவு வரை கைதான தோழர்களுக்கு கூடவே இருந்து உதவி செய்து இருக்கிறார்கள்.

திட்டமிட்டு சிறையில் அடைக்கிறது எனில், தமிழகக் காவல்துறை தமிழக மக்களின் சனநாயக-நேர்மையான கோரிக்கைக்கு விரோதமாகவும், தமிழின விரோதிகளுக்கு கைக்கூலி வேலைபார்ப்பதாகவும் நடந்து கொள்கிறது என்பதைத்தானே புரிந்து கொள்ள முடியும். இவ்வளவு தூரம் கடமையாக பணி செய்வதாக பாசாங்கு செய்பவர்கள், கிரானைட் வழக்கு விசாரணையின் பொழுது இரவு நேரத்தில் விசாரணைக்குழுவிற்கு பாதுகாப்பு கொடுக்காத நிகழ்வையும் நாம் மறக்கவில்லை என்பதையும் பதிவு செய்வோம். கொள்ளை கும்பல்களுக்கும், மதவெறி-சாதி வெறியர்களுக்கும் ஆதரவாக நடந்து கொள்பவர்கள் நேர்மையான கோரிக்கைக்காக, சுயநலமில்லாமல் போராடும் தோழர்களை அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது எனில் தமிழக காவல்துறை யாருக்கானது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

 

m2

 

அதிமுக அரசு, பாஜகவிற்கு அடிமையாகவும், தமிழக விவசாயிகளுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது என்பதையே இந்த அடக்குமுறை அம்பலப்படுத்துகிறது.

இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் ,
போராட்டத்தை தீவிரப்படுத்துவதே அடக்குமுறையை எதிர்கொள்வதற்கான ஒரே வழி.

சிறைச்சாலைகள் போராட்டத்தை மழுங்கடிக்காது. அடைத்துவைப்பதால் போராட்ட குணம் புதைந்துவிடாது.

அடங்கிட மாட்டோமென திமிரி எழுவதே நம் உரிமையை மீட்கும் வழி.

போராட்டங்கள் தமிழகத்தின் வீதிகளை நிரப்பட்டும்.

போராடுகிற தோழர்களை சனநாயகவிரோதமாக கைது செய்த அதிமுக அரசையும், காவல்துறையையும் கண்டித்து மே17 இயக்கம் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறது

 

கைது செய்யப்பட்ட தோழமைகளுக்கு ஆதரவாகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் வாய்ப்புள்ள அனைவரும் பதிவு செய்யுங்கள். நமது எதிர்ப்புகளை தீவிரப்படுத்துவோம்.

தமிழ்த்தேசமெங்கும் இருக்கும் வழக்கறிஞர்கள் போராடுகிற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், இயக்கங்களுக்கும் துணை செய்யுங்கள். அடக்குமுறையை எதிர்கொள்ள கைகொடுங்கள்.

கைது செய்யப்பட்ட தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும்  மே பதினேழு இயக்கம் தெரிவித்து முகநூலில் பதிவுயிட்டு இருக்கிறார்கள் .

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top